மலிவு சிகிச்சைகள்

மலிவு சிகிச்சைகள்

தாய்மை – ஒரு அழகான அனுபவம்

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்மணியும் கனவு காணும் ஒரு அற்புதமான அனுபவம். தன் குழந்தையை கையில் தழுவி, அன்பாக அணைத்துக் கொண்டு, முத்தமிட்டு, பாசமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெண்மணிக்கும் இருக்கும். ஆனால், அனைவருக்கும் அந்த அனுபவத்தை பெறும் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம் – தொழிலில் முன்னுரிமை கொடுத்து குழந்தைப் பேறு தாமதிப்பது, உடல்நலப் பிரச்சனைகள், மரபணு குறைபாடுகள், வயது காரணிகள், ஆண் கருத்தரிப்பு சிக்கல்கள் போன்றவை.

ஆனால் இன்றைய காலத்தில் எதுவும் சாத்தியமற்றது அல்ல. அறிவியல் மிக வேகமாக முன்னேறி வருகிறது. பல துறைகளில் மனிதர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெண்களின் கருத்தரிப்பிலும் சிக்கல்கள் இருந்தாலும், (மிகவும் கடுமையான உடல்நிலை தவிர) உதவி கருத்தரிப்பு முறைகள் (ART) மூலம் குழந்தையை பெறும் ஆசை நிறைவேற்ற முடிகிறது.

IVF என்றால் என்ன?

In-Vitro Fertilization (IVF) என்பது, பெண்ணின் முட்டை மற்றும் ஆணின் வீிரியணு மனித உடலுக்கு வெளியே சேர்க்கப்பட்டு கருவுற செய்வது. இயற்கையாக கர்ப்பம் தரிக்க முடியாத சூழ்நிலையில், தம்பதியர்கள் இந்த சிகிச்சையைத் தேர்வு செய்கிறார்கள்.

IVF சிகிச்சையின் செலவு

IVF சிகிச்சை கொஞ்சம் அதிக செலவாக இருக்கலாம். ஒவ்வொரு சுழற்சியின் (cycle) செலவும் தம்பதியரின் உடல்நிலை, மருத்துவத் தேவைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்.

ஆனால், கர்பகுடியில் எங்கள் நோக்கம் – பெற்றோராக வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு தம்பதியருக்கும் செலவுக் குறைவாக, ஆனால் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் சிகிச்சை வழங்குவது.

ஒவ்வொரு IVF மையத்திலும் செலவு மாறுபடும். சில மையங்கள் egg pickup, embryology, embryo transfer செலவையே மட்டும் சேர்க்கும். சில மையங்கள் அதோடு கூட ஆலோசனைகள், scan-கள் முதலியவற்றையும் சேர்க்கும். சிலர் injections, investigations செலவுகளையும் சேர்த்துக் கொள்வார்கள். அதனால், IVF சிகிச்சை செலவை ஒப்பிடும் போது – என்ன-என்ன சேர்க்கப்பட்டுள்ளது, என்ன சேர்க்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் கேட்பது அவசியம்.

IVF செலவுகள் அடங்கும் முக்கிய பகுதிகள்

  • OPD செலவுகள் – ஆலோசனை, ultrasound கண்காணிப்பு, counselling, ரத்த & பிற பரிசோதனைகள்

  • முன்-பரிசோதனைகள் – IVFக்கு முன் & பின் செய்யப்படும் பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் ஹார்மோன் ஊசிகள் செலவுகள்

  • OT செயல்முறை செலவுகள் – Egg pickup, embryo transfer, embryology, embryo culture, monitoring, freezing & thawing

  • Embryologist (கருவியலாளர் & குழுவின் சேவைச் செலவுகள்)

  • Embryology Lab (கருவள ஆய்வகம்) செலவுகள்

  • Blastocyst (பிளாஸ்டோசிஸ்ட்) வளர்ப்பு

  • Laser-assisted hatching (லேசர் உதவியுடன் கரு வளர்ச்சி உடைத்து வெளிவருதல்)

  • Documentation & Consent (ஆவணங்கள் மற்றும் ஒப்புதல் செலவுகள்)

  • Nursing, housekeeping & support team (நர்சிங், ஹவுஸ்கீப்பிங் மற்றும் ஆதரவு குழு) செலவுகள்

  • மற்ற விருப்ப செயல்முறைகள்

  • நோயறிதல் / அறுவை சிகிச்சை ஹிஸ்டரோஸ்கோபி(Diagnostic / operative hysteroscopy)

  • நோயறிதல் / அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி (Diagnostic / operative laparoscopy)

  • TESA / PESA / மைக்ரோ TESE 

  • தொடர்ச்சியான பரிமாற்றம்(Sequential transfer)

ஏன் சிறந்த IVF மையங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

மேற்கண்ட அனைத்து காரணிகளையும் புரிந்துகொண்ட பிறகு, வெற்றிவிகிதம் உயர்ந்த சிறப்பு IVF மையங்களில் செலவு சற்றே அதிகமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதற்கு காரணம் – சிறந்த தரமான சிகிச்சை, முன்னேற்றமான உள்கட்டமைப்பு, அனுபவமிக்க நிபுணர்கள், எந்த சமரசமும் இல்லாத மருத்துவ சேவை என்பதுதான்.

இறுதி மகிழ்ச்சி

செலவும், சிகிச்சை சிரமமும் இருந்தாலும், இறுதியில் ஒரு நாள் உங்கள் குழந்தையை கையில் தழுவி கொள்ளும் அந்த தருணம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும்.