வெற்றி விகிதங்கள் IVF

வெற்றி விகிதங்கள் IVF

வெற்றி விகிதங்கள்

ஒரு தம்பதியருக்கு கர்ப்பம் தரிக்க பல காரணங்கள் பாதிக்கும். அதில் பெண்ணின் வயது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.
21 வயதில், ஒரு பெண்ணின் கருவுறும் திறன் உச்சத்தில் இருக்கும். அப்போது சுமார் 90% முட்டைகள் இயல்பானவையாக இருக்கும். ஆனால் வயது அதிகரித்துக் கொண்டே செல்லும் போது கருவுறும் வாய்ப்பு குறையத் தொடங்குகிறது, குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு மிகவும் குறைந்து விடுகிறது.

IUI வெற்றி விகிதங்கள்

உலகளவில், அனைத்து வயதினருக்கும் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் IUI வெற்றி விகிதம் ஒரு சுழற்சிக்கு 10% முதல் 17% வரை உள்ளது. ஆனால் கர்பகுடியில் IUI மிகவும் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணம் எங்களுடைய காப்புரிமை பெற்ற செயல்முறை மேம்பாடுகள்ஆகும்.

IVF வெற்றி விகிதங்கள்

IVF வெற்றி விகிதம் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
உலகளவில், IVF வெற்றி விகிதம் சுமார் 30% முதல் 37% வரை உள்ளது. ஆனால் கர்பகுடியில், நாங்கள் எப்போதும் இதை விட மேலான வெற்றியை அடைந்து வருகிறோம். Donor embryo cycles மற்றும் Blastocyst transfer cycles ஆகியவற்றில் இன்னும் அதிகமான வெற்றி விகிதங்கள் பதிவாகின்றன.

வெற்றி விகிதத்தை பாதிக்கும் முக்கிய காரணங்கள் 

  1. வயது – பெண்ணின் வயது மற்றும் உடல்நிலை (முட்டை களஞ்சியம், ஹார்மோன் நிலைகள், உடல்நலம் – நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, மன அழுத்தம் போன்றவை).

  2. Stimulation Protocol – கருவுறுதலுக்காக பயன்படுத்தப்படும் தூண்டல் முறை. மருத்துவரின் நிபுணத்துவம் அடிப்படையில் இது சிறப்பாக அல்லது குறைவாக இருக்கலாம்.

  3. ஹார்மோன் ஊசிகள் மற்றும் IVF Media – பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் IVF media வின் தரம் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எப்போதும் சிறந்த தரம் வாய்ந்த மருந்துகள், தேர்ந்தெடுப்பது முக்கியம்.

  4. மருத்துவமனை உள்கட்டமைப்பு – குறிப்பாக operation theatre மற்றும் embryology lab (எதில் fertilization நடக்கிறது). இவை தரமாக பராமரிக்கப்படாவிட்டால் வெற்றி விகிதம் குறைந்து விடும்.

  5. கருவுறுதல் குழு (Fertility Team) – நிபுணர் மருத்துவர், embryologist, andrology lab in-charge மற்றும் அனைத்து ஆதரவு பணியாளர்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

கர்பகுடியின் சிறப்புகள்

கர்பகுடியில் மேல் குறிப்பிடப்பட்ட எல்லா அம்சங்களிலும் மிக உயர்ந்த தரத்தில் செயல்படுகிறோம்:

சிறந்த உள்கட்டமைப்பு
அனுபவமிக்க நிபுணர் மருத்துவர்கள் – ஆயிரக்கணக்கான IVF சைக்கிள்களை கையாள்ந்தவர்கள்
சிறந்த தரமான மருந்துகள் மற்றும் (தரத்தில் எந்த சமரசமும் இல்லை) உலகளாவிய புதிய நவீன முறைகளை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வது

இதுவே எங்கள் வெற்றி விகிதம் அசாதாரணமாக உயர்வதற்கான காரணம்.