ICSI சிகிச்சை
இன்ட்ராசைடோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
கர்பகுடி IVF மையம் தம்பதிகள் கருவுற உதவுவதற்காக ICSI சிகிச்சையை வழங்குகிறது.
ICSI (Intracytoplasmic Sperm Injection) என்பது ஒரு சக்திவாய்ந்த துணை இனப்பெருக்க நுட்பமாகும். இது ஆண் கருத்தரிக்க முடியாமை (male infertility) பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க பல தம்பதிகளுக்கு உதவியுள்ளது.
ICSI சிகிச்சையின் போது, ஒரு தனி விந்தணுவை நேரடியாக முட்டைக்குள் செலுத்துகிறார்கள். இதனால் கருவுறும் (fertilization) வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் அனுபவமிக்க மற்றும் அன்பான மருத்துவர்கள் கொண்ட குழு, ICSI முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்து, பெற்றோராகும் கனவை நனவாக்க நாங்கள் உங்களுடன் இருப்போம்.
கருவுறுதல் இயல்பாக எப்படி நடக்கிறது?
சாதாரணமாக, விந்தணுவின் தலை, முட்டையின் வெளிப்புற சுவரில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின், அது அந்த சுவரைத் தள்ளி, முட்டையின் உள்ளே (cytoplasm) சென்று சேரும். அங்கு தான் கருவுறுதல் நடைபெறும்.
ஆனால் சில நேரங்களில்:
முட்டையின் வெளிப்புற சுவர் மிகவும் தடிமனாக இருப்பதால், விந்தணு உள்ளே செல்ல முடியாமல் போகலாம்.
விந்தணு போதிய அளவு சுறுசுறுப்பாக swim செய்ய முடியாமல் இருக்கலாம்.
இந்தச் சூழலில், ICSI என்ற சிறப்பு முறையை IVF (In Vitro Fertilization) உடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள். இதில், ஒரு விந்தணுவை நேரடியாக முட்டையின் சைடோபிளாஸ்மிற்குள் செலுத்துகிறார்கள்.
ICSI மற்றும் IVF இடையிலான தொடர்பு
ICSI என்பது IVF முறையின் ஒரு பகுதியே. ஆய்வகத்தில் ICSI நடைபெறுவதால், உங்களுக்குக் கிடைக்கும் IVF சிகிச்சை, சாதாரண IVF போலவே தோன்றும்.
பெண் துணைவர், முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மருத்துவர் இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலம் வளர்ச்சியை கண்காணிப்பார்.
போதுமான அளவு நன்கு வளர்ந்த முட்டை பைகள் (follicles) உருவானதும், egg retrieval எனப்படும் முறையின் மூலம், அல்ட்ராசவுண்ட் வழிகாட்டும் சிறப்பு ஊசி கொண்டு, முட்டைகள் கருப்பை முட்டைப்பைகளில் இருந்து எடுக்கப்படுகின்றன.
ICSI சிகிச்சை நடைமுறை என்ன?
ICSI சிகிச்சை நடைமுறை சற்றே சிக்கலாகவும் குழப்பமாகவும் தோன்றக்கூடும் என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்துள்ளோம். அதனால்தான், நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்குவதை முதன்மையாகக் கருதுகிறோம்.
எங்கள் அதிநவீன ICSI மையம், சமீபத்திய தொழில்நுட்பங்களுடன், உங்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
ICSI சிகிச்சை நடைமுறை:
முதலில் ஆரோக்கியமான, நல்ல தரமான விந்தணுக்கள் கவனமாகத் தேர்வு செய்யப்படுகின்றன.
பின்னர், சிறப்பு மைக்ரோ பைப்பெட் (micropipette) என்ற கருவி மூலம், அந்த விந்தணு நேரடியாக முட்டைக்குள் செலுத்தப்படுகிறது.
எங்கள் குழு, ICSI சிகிச்சை நடைமுறையின் ஒவ்வொரு படியிலும் உங்களை அன்பும் அக்கறையும் கொண்ட வழிகாட்டுதலுடன் துணை நிற்கிறது. பெற்றோராகும் உங்கள் பயணத்தில், நீங்கள் நம்பிக்கையுடன் முன்னேற நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
ஏன் ICSI தேவைப்படும்?
ICSI சிகிச்சை கருத்தரிப்பில் ஏற்படும் சில பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. அவை:
- விந்தணுக்கள் குறைவாக உற்பத்தியாகி, IUI (Intrauterine Insemination) அல்லது IVF செய்ய முடியாத நிலை.
- விந்தணுக்கள் முட்டையுடன் ஒட்டிக் கொள்ள சிரமப்படும் நிலை.
- ஆண் இனப்பெருக்க குழாய்களில் உள்ள தடுப்பு (blockage) காரணமாக விந்தணுக்கள் வெளியே வர முடியாத நிலை.
- விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, பாரம்பரிய IVF முறையில் முட்டைகள் fertilize ஆகாத நிலை.
- In vitro matured eggs பயன்படுத்தப்படும் போது.
- முன்பு உறையவைத்த (frozen) முட்டைகள்பயன்படுத்தப்படும் போது.
முந்தைய IVF சிகிச்சை தோல்வியடைந்திருந்தால்.
விந்தணுக்கள் குறைவாக (Oligospermia) அல்லது இல்லாமல் (Azoospermia) இருக்கும் ஆண்கள்.
ICSI வேலைசெய்யுமா? ICSI வெற்றி விகிதம் என்ன?
உயர் வெற்றி விகிதம் கொண்ட ICSI மையத்தைத் தேடுகிறீர்களா? அப்படியானால் கர்பகுடி IVF மையம் தான் சிறந்த இடம். எங்கள் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள், எண்ணற்ற தம்பதிகளுக்கு ஆண் கருத்தரிக்க முடியாமை பிரச்சினையைத் தாண்டி, பெற்றோராகும் கனவை நிறைவேற்ற உதவியுள்ளது.
ஒவ்வொரு தம்பதியினதும் பயணம் தனித்துவமானது என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதனால், உங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை திட்டங்களை வடிவமைக்கிறோம். உங்களுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும், மிக உயர்ந்த ICSI வெற்றி விகிதங்களில் ஒன்றை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
ICSI வெற்றி விகிதம்
ICSI மூலம் சுமார் 50% முதல் 80% முட்டைகள் fertilize ஆகின்றன.
IVF மற்றும் ICSI இரண்டின் வெற்றி விகிதமும் ஒரே மாதிரியாகும்.
ஒவ்வொரு முட்டையும் fertilize ஆகாது; சில முட்டைகள், விந்தணு செலுத்தப்பட்டாலும் கூட, fertilize ஆகாமல் போகலாம்.
நினைவில் கொள்ள வேண்டியது
Fertilization விகிதம் என்பது, கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அல்லது குழந்தை பிறக்கும் விகிதம் என்பதைக் குறிக்காது.
ICSI முறையில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்:
சில முட்டைகள் சேதமடையலாம்.
விந்தணு செலுத்தப்பட்ட பிறகும், முட்டை கருவாக (embryo) வளராமல் போகலாம்.
கருவாக உருவான பிறகு, அது வளர்ச்சி நிறுத்திக்கொள்ளக்கூடும்.
IVF உடன் அல்லது ICSI உடன் கருவுறுதல்
Fertilization நடந்த பிறகு, தம்பதிகள் ஒரு குழந்தை, இரட்டை குழந்தை (twins), அல்லது முக்குழந்தை (triplets) பெறும் வாய்ப்பு, IVF ஆனாலும் ICSI ஆனாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
ICSI குழந்தையின் வளர்ச்சியை பாதிக்குமா? ICSI-க்கு ஏற்படும் சாத்தியமான அபாயங்கள் என்ன?
ICSI சிகிச்சை, ஆண் கருத்தரிக்க முடியாமையை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய சில சாத்தியமான அபாயங்களை அறிந்திருப்பது முக்கியம். பல குழந்தை கர்ப்பம் (Multiple pregnancies) கருப்பை முட்டைப்பை அதிக ஊக்குவிப்பு நோய் (Ovarian Hyperstimulation Syndrome – OHSS) பிறவிக் குறைகள் (Birth defects)
கர்பகுடி IVF மையத்தில், நாங்கள் எப்போதும் எங்கள் நோயாளிகளுக்கு முழுமையான மற்றும் வெளிப்படையான பராமரிப்பை வழங்க நம்பிக்கை கொள்கிறோம். அனுபவமிக்க எங்கள் மருத்துவர்கள், ICSI-யின் சாத்தியமான அபாயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்த அபாயங்களை குறைத்து, வெற்றியின் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சிகிச்சைத் திட்டத்தை வடிவமைப்பார்கள்.
ரு பெண் இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் போது, சுமார் 1.5% முதல் 3% குழந்தைகளில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ICSI மூலம் ஏற்படும் குறைபாடுகள் IVF-க்கு ஒத்ததாக இருக்கும், ஆனால் இயற்கை கருத்தரிப்பை விட சிறிது அதிகமாக இருக்கும். இந்தச் சிறிதளவு அதிகமான அபாயம், சிகிச்சையால் அல்ல, கருத்தரிக்க முடியாமையை உண்டாக்கும் காரணங்களாலேயே இருக்கலாம்.
ICSI முறையின் மூலம் கருத்தரித்த குழந்தைகளில், மிகக் குறைவான சம்பவங்களில் கீழ்க்கண்ட சிக்கல்கள் காணப்பட்டுள்ளன: Beckwith-Wiedemann Syndrome; Angelman Syndrome; Hypospadias; Sex Chromosome Abnormalities
சில கருத்தரிக்க முடியாமை பிரச்சினைகள் மரபணு சார்ந்தவையாக இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, ICSI மூலம் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு, அவர்களின் தந்தையைப் போலவே விந்தணு தொடர்பான கருத்தரிக்க முடியாமை பிரச்சினைகள் இருக்கக்கூடும்.
ICSI சிகிச்சைக்கான செலவு
இந்தியாவில் உள்ள ICSI சிகிச்சைக்கான செலவு பல தம்பதிகளுக்கு ஒரு பெரிய கவலையாக இருக்கலாம். இருப்பினும், இந்த சிகிச்சையை எல்லோருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, தரமான ICSI சிகிச்சையை குறைந்த செலவில் வழங்குகிறோம்.
எங்களின் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம், உங்கள் பட்ஜெட்டைப் பொருட்படுத்தாமல், சிறந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்கிறோம். ICSI சிகிச்சைக்கான செலவை எல்லோருக்கும் எளிதாக்க, நாங்கள் நெகிழ்வான கட்டணத் திட்டங்களை வழங்குகிறோம், மேலும் பல காப்பீட்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.