MACS முறையால் சிறந்த விந்தணுக்களைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமான கருவுறுதலை பெறலாம்!

macs

MACS முறையால் சிறந்த விந்தணுக்களைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமான கருவுறுதலை பெறலாம்!

MACS என்றால் என்ன?

Magnetic Activated Cell Sorting (MACS) என்பது, செல் சேதம் அல்லது மரணம் (Apoptosis) அடைந்த எந்த அறிகுறிகளும் இல்லாத, முழுமையான DNA-வுடன் ஆரோக்கியமான விந்தணுக்களைத் தேர்ந்தெடுக்க உதவும் இம்யூனோ-மக்னெடிக் (immunomagnetic) தொழில்நுட்பம் ஆகும்.

  • ART (Assisted Reproductive Techniques) மூலம் கர்ப்பம் அடைய, விந்தணுவின் தரம் மிக முக்கியம்.

  • Apoptotic sperm (சேதமடைந்த விந்தணுக்கள்) கருவுறுதல் வாய்ப்பை குறைக்கும்.

  • MACS முறையில், இவ்வாறு சேதமடைந்த விந்தணுக்கள் தனியே பிரிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன.

  • இதன் மூலம் விந்தணுவின் தரம் உயர்ந்து, IVF மற்றும் ICSI போன்ற ART சிகிச்சைகளில் வெற்றி விகிதம் அதிகரிக்கிறது.

எப்போது MACS பயன்படுத்தப்படுகிறது?

இந்த முறையை எல்லா ART நோயாளிகளிடமும் பயன்படுத்தலாம். ஆனால் குறிப்பாக பின்வரும் நிலைகளில் பரிந்துரைக்கப்படுகிறது:

  • Artificial Insemination சிகிச்சைகளில்

  • அதிக DNA சேதம் (fragmentation) கொண்ட விந்தணுக்கள் உள்ளவர்களுக்கு

  • காரணம் விளங்காத முறையற்ற கருக்கலைப்பு (repeated miscarriages) ஏற்பட்டவர்களுக்கு

  • ஒரு IVF சிகிச்சை தோல்வியடைந்த பிறகு அல்லது கருவிணை தரம் குறைவாக இருக்கும் நிலையில்

  • Implantation rate குறைவாக இருக்கும் தம்பதிகளுக்கு

MACS நடைமுறை (Procedure)

  1. விந்தணு மாதிரி (Semen sample) மக்னெடிக் பீல்டு (magnetic field) வழியாக செலுத்தப்படுகிறது.

2. சேதமடைந்த, apoptotic விந்தணுக்கள் காந்தம் கொண்ட பில்டரில் தங்கி விடுகின்றன.

3. ஆரோக்கியமான, தரமான விந்தணுக்கள் மட்டும் பிரிந்து எடுக்கப்படுகின்றன.

4. பின்னர், ICSI (Intracytoplasmic Sperm Injection) மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல விந்தணு நேரடியாக முட்டையின் உள்ளே செலுத்தப்படுகிறது.

இதன் மூலம்:

  • Implantation தோல்விகள் குறைகின்றன

• IVF வெற்றி விகிதம் அதிகரிக்கிறது.

• கர்ப்பம் அடையும் வாய்ப்பு மேம்படுகிறது

MACS முறை குறிப்பாக DFI (DNA Fragmentation Index) > 25% உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கர்பகுடி IVF மையத்தில் MACS

  • கர்பகுடி IVF மையம் சிறந்த மருத்துவர்கள் மற்றும் புதிய ART தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக வெற்றி விகிதத்துடன் சிகிச்சை அளிக்கிறது.

  • ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட கவனமும், பராமரிப்பும் வழங்கப்படுகிறது.

  • MACS + ICSI போன்ற முன்னேற்றமான முறைகளால் பல தம்பதிகளுக்கு பெற்றோராகும் கனவை நனவாக்கி வருகிறோம்.

MACS – உங்களின் பெற்றோராகும் பயணத்தை நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் அறிவியல் வழி!