தொடர்ச்சியான கருவிணை மாற்றம்
வழிப்பறிந்த தம்பதிகளுக்கு பெற்றோராகும் ஆசையை நிறைவேற்றும் அருள்தந்தை!
Sequential Embryo Transfer (SET) என்றால் என்ன?
SET என்பது, IVF சிகிச்சையின் போது ஒரே மாதவிடாய் சுழற்சிக்குள் இரண்டு குழுக்களாகக் கருவிணைகளை மாற்றும் (transfer) முறை ஆகும்.
முதல் மாற்றம்: Day 3 (மூன்றாம் நாள்)
இரண்டாம் மாற்றம்: Day 5 (ஐந்தாம் நாள்)
இதன் மூலம்:
கருவிணை பதிதல் (implantation) விகிதம் உயரும்
கர்ப்பம் அடையும் வாய்ப்பு அதிகரிக்கும்
பல கர்ப்பம் (multiple pregnancy) ஏற்படும் அபாயம் குறையும்
Blastocyst transfer - இல் வரும் சிக்கலான cycle cancellation போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்
Repeated IVF தோல்வி பெற்றவர்களுக்கு, SET ஒரு சிறந்த விருப்பமாக கருதப்படுகிறது.
எப்போது SET செய்யப்படுகிறது?
• IVF சிகிச்சையில் பலமுறை தோல்வி அடைந்த தம்பதிகளுக்கு
• போதுமான நல்ல தரமான கருவிணைகள் (good quality embryos) உள்ள நோயாளிகளுக்கு
• கருவிணை பதிதல் (implantation) சிரமமாக இருக்கும் நிலைகளில்
SET-இன் நன்மைகள்
1. சிறந்த கருவிணைத் தேர்வு: Blastocyst நிலைக்கு வரும் வரை வளர்த்ததால், ஆரோக்கியமான கருவிணைகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன.
2. Endometrium ஒத்திசைவு: Day-3 transfer கருப்பைச் சுவர் (Endometrium) பதிதலுக்கு உகந்ததாக மாற உதவுகிறது.
3. பல கர்ப்பம் குறைவு: ஆரோக்கியமான, குறைந்த எண்ணிக்கையிலான கருவிணைகள் மட்டுமே மாற்றப்படுவதால், multiple pregnancy அபாயம் குறைகிறது
4. Cryopreservation தேவை குறைவு: தேவையற்ற அதிகப்படியான கருவிணைகளை உறைய வைப்பதற்கான அவசியம் குறைகிறது.
5. மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்பு: Fresh transfer செய்யாத blastocysts-ஐ உறையவைத்து (FET) பின்னர் பயன்படுத்த முடியும்.
"கருவிணைகள் கருப்பையுடன் பேசுகின்றன"
கருவிணைகள் cytokines எனப்படும் ஹார்மோன்கள் மூலம் கருப்பையுடன் தொடர்பு கொள்கின்றன.
Day-3 கருவிணைகள் கருப்பையைத் தயார்படுத்துவதால், Day-5 blastocyst-க்கு implantation எளிதாகிறது.
இதன் மூலம் implantation மற்றும் கர்ப்ப வாய்ப்பு அதிகரிக்கிறது.
கர்பகுடியில் SET
கர்பகுடி IVF மையத்தில், பல IVF தோல்வி பெற்ற நோயாளிகள் இந்தியா முழுவதலிருந்தும் வருகை தருகிறார்கள்.
இங்கே Sequential Embryo Transfer (SET) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, பெரும்பாலானவர்களுக்கு கர்ப்பம் அடையச் செய்கிறோம்.
SET – பெற்றோராகும் பயணத்தில் புதிய நம்பிக்கை ஒளி!